பாகிஸ்தானியர்கள் இன்று கூகுளில் அதிகம் தேடிய ஒரே வார்த்தை.., என்ன தெரியுமா?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டதை பழிதீர்க்க இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாமை அழித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் இந்த அதிதீவிர தாக்குதலுக்கு, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் பற்றிய புகைப்படங்களும், காணொளிகளும் சமூகவலைதளங்களில் முழுமையாக வலம்வருகிறது.
அந்தவகையில், பாகிஸ்தானியர்கள் இன்று கூகுளில் அதிகளவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தேடியுள்ளனர்.
அதன்படி, பாகிஸ்தானியர்கள் அதிகம் தேடியது, சிந்தூர் என்றால் என்ன? என்பது தான்.
இதேபோல், ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன, ஆங்கிலத்தில் சிந்தூர் என்றால் என்ன, ஆபரேஷன் சிந்தூர் விக்கி என தேடியுள்ளனர்.
இஸ்லாமாபாத், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் இருந்தும் தாக்குதல் குறித்து கூகுளில் தேடப்பட்டிருக்கிறது.
அதில், இந்தியா ஏவுகணையை ஏவுகிறது, இந்தியா ஏவுகணை தாக்குதல், பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் உள்ளிட்டவைகளை தேடியுள்ளனர்.
அதேபோல், பாகிஸ்தானின் பல பகுதிகளிலும், வெள்ளை கொடி என்பதை தேடியுள்ளனர்.
குறிப்பாக பாகிஸ்தானியர்கள், இந்தியா போரை அறிவித்தது, இன்று இந்தியா பாகிஸ்தான் போர், போர் தகவல்கள் ஆகியவற்றை அதிகம் தேடியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |