பிரான்ஸ் மக்களிடையே ஜனாதிபதி மேக்ரானின் செல்வாக்கு எப்படி இருக்கு? வெளியான கருத்து கணிப்பு
பிரான்ஸ் மக்களிடையே ஜனாதிபதியின் செல்வாக்கும் இன்றளவும் அப்படியே உள்ளதா? இல்லையா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பிரதம்ராஅன இமானுவேல் மேக்ரான், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
மக்களை நோயிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று அவர் பல்வேறு கடுமையான விதிகளை அறிவித்து வருகிறார். இதையடுத்து மக்கள் மனதில் மேக்ரானைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன் பாடி, மக்கள் மனதில் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் தற்போது 40 சதவீத புள்ளிகள் பெற்று நன்மதிப்புடன் உள்ளார். கடந்த வருடம் ஜனவாி பிப்ரவாி மாதங்களில் 33% சதவீத புள்ளிகளுடன் இருந்த நிலையில், தற்போது 7 புள்ளிகளால் செல்வாக்கு அதிகம் பெற்றுள்ளார். இவ் ஆய்வின் இணைப்பு
அதேவேளை, பிரதமர் Jean Castex, கடந்த மாதம் பெற்ற அதே செல்வாக்குடன் தற்போதும் உள்ளார். பிரதமர் 37 சதவீத வீத செல்வாக்குடன் உள்ளார்.
இந்த கருத்துக்கணிப்பு கடந்த 21 மற்றும் 22-ஆம் திகதிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,913 பேரிடம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.