பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்த Smartphone! முதல் விற்பனையில் விற்றுத்தீர்ந்தது!
ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் கடந்த வாரம் அறிமுகம் செய்த நிலையில் இந்த செல்போன்கள் முதல் விற்பனையில் முழுவதுமாக விற்று தீர்ந்தது.
முதல் விற்பனை நிறைவுற்ற நிலையில், இதே ஸ்மார்ட்போன் மறுவிற்பனைக்கு (செகண்ட் ஹேண்ட் சேல்ஸ்) ஒன்லைன் தளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
பிரீமியம் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் ஒப்போ பைண்ட் என் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்த ஒரு மொடல் ஆகும்.
இந்த மொடலை கொண்டு ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்கி இருக்கிறது.
ஒப்போ பைண்ட் என் ஸ்மார்ட்போன் 8 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 12 ஜி.பி., 512 ஜி.பி. என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட் போனின் விலை $1,650.99 (இலங்கை மதிப்பில் ரூ 3,35,820.28 ஆகும்)