50MP கேமரா, 6.7" OLED திரை! Oppo Reno 12 & 12 Pro சிறப்பம்சங்கள்
Oppo Reno 12 மே 23ம் திகதி மூன்று ரியர் கேமராக்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது.
Oppo தனது ஸ்மார்ட்போன் வரிசையில் Reno 12 தொடரை மே 23 ஆம் திகதி அறிமுகப்படுத்த தயாராகிறது. நிறுவனம் சமீபத்தில் Weibo post-ல் வெளியீட்டு திகதி மற்றும் போன்களின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது, இது சில அற்புதமான அம்சங்களை பற்றி குறிப்பிடுகிறது.
முன்னோட்ட காட்சிகள் இரண்டு ஸ்மார்ட்போன் வடிவமைப்புகளை காட்சிப்படுத்துகிறது, இது Standard Reno 12 மற்றும் Reno 12 Pro ஆகியவையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Oppo Reno 12 series launching on 23 May in China ☑️
— Anir Chakraborty (@encoword) May 15, 2024
✅ Oppo Reno 12 ~ Mediatek Dimensity 8250
✅ Oppo Reno 12 Pro ~ Mediatek Dimensity 9200+
Reno 12 Series very soon coming to India ☑️ pic.twitter.com/3LB1Cq9nKp
மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் LED ஃபிளாஷ் கொண்ட செவ்வக வடிவ கேமரா வடிவமைப்பை கொண்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
பெரிய திரை: Oppo சரியான விவரங்களை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், Reno 12 தொடர் முந்தைய மாடல்களை விட கணிசமாக மேம்படுத்தப்பட்ட 6.7-அங்குல OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று வதந்திகள் கூறுகின்றன.
சக்தி வாய்ந்த கேமராக்கள்: புகைப்பட ஆர்வலர்கள் மகிழ்ச்சியடையும் வண்ணமாக Oppo Reno 12 வெளிவர உள்ளது, ஏனெனில் கசிவுகள் 50 megapixel முன் கேமரா மற்றும் 50 megapixel பிரதான சென்சார், 8 megapixel அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50 megapixel டெலிஃபோட்டோ கொண்ட மூன்று ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளதாக காட்டுகிறது.
வேகமான processer: Reno 12 Pro சமீபத்திய MediaTek Dimensity 9200 Star Speed Edition செயலி மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது, இது சிறந்த செயல்திறனை உறுதி செய்கிறது.
Oppo Reno 12 series are coming with custom Sony sensor#opporeno12 #opporeno #oppo #opporeno12series pic.twitter.com/oqAFXz02tE
— Featurverse (@featurverse) February 11, 2024
பற்றரி திறன்: நாள் முழுவதும் உங்களுக்கு சக்தி வழங்க, இரண்டு போன்களும் 5,000mAh பற்றரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, Pro மாடலுக்கான 80W வேகமான சார்ஜிங் பற்றியும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
விலை விவரம்: குறிப்பிட்ட விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் இந்த மேம்பாடுகளுடன், ரெனோ 12 சீரிஸ் நடுத்தர விலை முதல் உயர் விலை ஸ்மார்ட்போன் பிரிவில் போட்டித்திறன் மிக்க விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |