OPPO-வின் புதிய RENO 7 SE, RENO 7 மற்றும் RENO 7 PRO! அறிமுகத்திற்கு முன்பே கசிந்த விவரக்குறிப்புகள்
Oppo வரும் நவம்பரில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ள Reno 7, Reno 7 Pro மற்றும் Reno 7 SE (Oppo Reno 7 Series) மொபைல் போன்களின் முழு விவரக்குறிப்புகள், அறிமுகத்திற்கு முன்பே ஓன்லைனில் வெளிவந்துள்ளன.
தகவல்களின்படி, Oppo நிறுவனம் ரெனோ 7 வரிசையின் கீழ் ரெனோ 7 மற்றும் ரெனோ 7 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடும். ரெனோ 7 ப்ரோ பிளஸ் வெளியாகாது என கூறப்படுகிறது.
ஆனால், அதற்கு பதிலாக ரெனோ 7 தொடரில் மூன்றாவது ஸ்மார்ட்போனாக Reno 7 SE இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை பொறுத்தவரை Oppo இன்னும் அமைதியாகவே உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த மொடல் போன்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, Oppo Reno 7, Reno 7 Pro மற்றும் Reno 7 SE ஸ்மார்ட்போன்களின் முழு விவரக்குறிப்புகள் இணையத்தில் வெளிவந்துள்ளன.
ஒப்போ ரெனோ 7 சீரிஸ் கசிந்த விவரங்கள்:
ரெனோ 7 மற்றும் ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் Full HD+ தெளிவுத்திறனுடன் கூடிய மிகப்பெரிய 6.5 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். அதில் RENO 7 திரை 90Hz புதுப்பிப்பு வீதத்தை (refresh rate) ஆதரிக்கும். மறுபுறம், RENO 7 Pro-வின் திரை 120Hz புதுப்பிப்பு வீத ஆதரவை வழங்கும் என கூறப்படுகிறது.
மேலும், ரெனோ 7 மற்றும் ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,500 mAh பேட்டரி கொண்டிருக்கும்.
இரண்டு கைபேசிகளிலும் 32MP செல்ஃபி கேமரா இருக்கும். ரெனோ 7 மாடல் 50MP சோனி IMX766 கேமரா, 16MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP போர்ட்ரெய்ட் லென்ஸ் உள்ளிட்ட மூன்று பின்புற கேமராக்களுடன் வரும்.
அதேபோல், ரெனோ 7 ப்ரோவும் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இதில் 50எம்பி சாம்சங் ஜிஎன்5 சென்சார், 64எம்பி ஓம்னிவிஷன் ஓவி64பி அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் பின்புறத்தில் 13எம்பி டெலிஃபோட்டோ கேமரா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reno 7-ல் MediaTek Dimensity 1200 SoCஐக் கொண்டிருக்கும். இது 8 ஜிபி, 12 ஜிபி ரேம் விருப்பங்களுடன் அனுப்பப்படும் மற்றும் 256 ஜிபி வரை உள் சேமிப்பு (Internal Storage) திறனை வழங்கும். ப்ரோ மாறுபாடு ஸ்னாப்டிராகன் 888 SoC மூலம் இயக்கப்படும்.
Reno 7 SE விவரக்குறிப்புகள்:
வரவிருக்கும் ரெனோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன் ரெனோ 7 வரிசையில் மிகக் குறைந்த மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது MediaTek Dimensity 920 SoCஐ கொண்டிருக்கும்.
மேலும், இது 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் Full HD+ தெளிவுத்திறனுடன் 6.43-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு திறனுடன் இந்த போன் கிடைக்கும்.
மேலும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,300mAh பேட்டரி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமெராவை பொறுத்தவரை, போனின் பின்புறம் 64MP OmniVision OV64B பிரைமரி கேமரா, 8MP Sony IMX355 கேமரா மற்றும் 2MP போர்ட்ரெய்ட் லென்ஸ் ஆகிய மூன்று கமெராக்கள் இருக்கும். இது தவிர, முன்புறம் 32MP கேமராவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Reno 7 தொடர் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்களைப் பகிர்வதை Oppo தவிர்த்துள்ளது. இருப்பினும், இந்தத் தொடர் இந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்படும் என்று முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.