சாம்சங்குக்கு போட்டியாக மடிக்கக்கூடிய அசத்தல் ஸ்மார்ட்போன்! களத்தில் இறங்கிய பிரபல நிறுவனம்
சாம்சங் நிறுவனத்துக்கு போட்டியாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை ஓப்போ தயரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சாம்சங் நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளது. அதற்கு போட்டி தர ஓப்போ முடிவு செய்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் தற்போது புதிதாக இரண்டு மடிக்கக்கூடிய மொடல் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள் சாம்சங்கின் Z பிளிப் மொடல்கள் போன்று இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டில் ஒன்று கிளாம்ஷெல் ஃபோல்டபிள் டிசைனையும், மற்றொன்று புத்தகத்தை போன்று மடிக்கக்கூடிய டிசைனையும் கொண்டுள்ளது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதியில் கடந்த 2021 ஆம் ஆண்டில் 8.9 மில்லியன் யூனிட்களை எட்டியது. இது 2024 ஆம் ஆண்டளவில் 30 மில்லியன் யூனிட்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைகள் உள்ள போதிலும் மடிக்கக்கூடிய ஸ்மார்போன்களின் வளர்ச்சி ஆண்டுக்கு 148 சதவீதமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்களின் சந்தை 12 சதவீதம் மட்டுமே வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.