மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் ஓப்போ! இவ்ளோ வசதிகள் இருக்கா? கசிந்த புகைப்படங்கள்
ஒப்போ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
ஒப்போ நிறுவனம் புதிதாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மொடலுக்கு போட்டியாக அமைகிறது.
புதிய ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.8 இன்ச் திரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கலர் ஓ.எஸ். 12 மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்போவின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.