ஷபானா நிதி அமைச்சரானால் அது ஒரு பேரழிவாக இருக்கும்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்கள்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக இருந்தவரான ஆன்டி பர்னாம் என்பவர், வரும் திங்கட்கிழமை பொறுப்பேற்க இருக்கிறார்.
இந்நிலையில், பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதுக்கு, பிரித்தானியாவின் நிதி அமைச்சராக பதவி உயர்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
அடுத்த நிதி அமைச்சர் யார்?
கடந்த சில வாரங்களாக, பிரித்தானிய எரிசக்தித் துறைச் செயலரான எட் மிலிபேண்ட் என்பவர் அடுத்த நிதி அமைச்சராகக்கூடும் என தகவல்கள் வெளியாகிவந்தன.
ஆனால், தற்போது, பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதுக்கு, பிரித்தானியாவின் நிதி அமைச்சராக பதவி உயர்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஷபானாவுக்கு நிதி அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டால், அது ஆன்டி பர்னாமுக்கு பேரழிவாக அமையக்கூடும் என லேபர் கட்சியினர் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஷபானாவுக்கு பொருளாதார பின்னணியும் கிடையாது, பொருளாதாரத்தை எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்த தெளிவான யோசனையும் கிடையாது, இதில் அபாயங்கள் அதிகம்.
ஷபானா நிதி அமைச்சராவது நடக்குமானால், அது பெரிய தவறாக அமைந்துவிடும் என்கிறார்கள் மூத்த லேபர் கட்சியினர் சிலர்.
இதற்கிடையில், ஷபானா நிதி அமைச்சராவது இறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ள சிலர், வெளியுறவுச் செயலரான யெவட் கூப்பரை நிதி அமைச்சராக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளனர்.

அதேபோல, பொருளாதார நிபுணர்களும், ஷபானா, சர்ச்சைக்குரிய கொள்கைகளை முன்வைப்பவர் என்றும், ஆன்டி பர்னாம் வேலை செய்யும் விதத்துக்கு மாறாக செயல்படுபவர் என்றும், அவருக்கு பொருளாதார தகுதிகளோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லை என்றும், அவர் நிதி அமைச்சரானால், அது கருவூல சுதந்திரத்தையும், சந்தை நம்பகத்தன்மையையும் பாதிக்கும் என்றும் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |