இன்றிரவு பிரித்தானியா வரும் ட்ரம்ப்: காத்திருக்கும் எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று இரவு பிரித்தானியா வர இருக்கிறார்.
இன்றிரவு பிரித்தானியா வரும் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று இரவு ஸ்கொட்லாந்துகு வருகை புரிய இருக்கிறார்.
விடுமுறைக்காக பிரித்தானியா வரும் அவர், Aberdeenshire என்னுமிடத்தில் ஒரு கோல்ஃப் விளையாட்டு மைதானத்தைத் திறந்துவைக்க இருக்கிறார்.
காத்திருக்கும் எதிர்ப்பு
இந்நிலையில், ஸ்கொட்லாந்து வரும் ட்ரம்புக்கு அங்கு பலத்த எதிர்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கொட்லாந்தின் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரித்தானியாவிலிருந்து கூடுதல் பொலிசாரை அனுப்ப ஸ்கொட்லாந்து பொலிஸ் துறை அழைப்பு விடுத்துள்ளது.
ட்ரம்புக்கும் ஸ்கொட்லாந்துக்குன் என்ன தொடர்பு?
ட்ரம்பின் தாயான மேரி (Mary Anne MacLeod) ஸ்கொட்லாந்தில்தான் பிறந்தார், அங்குதான் ஒரு எளிய வீட்டில் வளர்ந்தார்.
பின்னர் நியூயார்க்கில் அவர் ஃப்ரெட் சி ட்ரம்ப் (Fred C. Trump) என்பவரை சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஜேர்மானிய புலம்பெயர்ந்தோரான அந்த ஃப்ரெட்தான் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தந்தை.
ஆக, 2006ஆம் ஆண்டு, தன் தாய் வளர்ந்த வடக்கு கடற்கரையில் பிரம்மாண்டமான கோல்ஃப் மைதான மற்றும் கட்டிடங்களை கட்ட முடிவு செய்தார் ட்ரம்ப்.
ஆனால், அந்த கடற்கரை பல அரியவகை உயிரினங்களின் வாழ்விடம் என்று கூறி உள்ளூர் மக்கள் ட்ரம்ப் கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அந்த எதிர்ப்பு இப்போதும் நீடிக்கிறது. ஆகவேதான் ட்ரம்ப் இன்றிரவு அந்த இடத்துக்குச் செல்லும் நிலையில், அவருக்கு எதிர்ப்பு இருக்கும் என பொலிசார் எதிர்பார்க்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |