எதிர்ப்பையும் மீறி மன்னர் சார்லசுக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு
பிரித்தானிய மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் அவுஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ள நிலையில், அவர்களுக்கு எதிர்பாராத அளவில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
எதிர்ப்பையும் மீறி மன்னர் சார்லசுக்கு கிடைத்த வரவேற்பு
மன்னர் சார்லஸ் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானதுமே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக சில அமைப்புகள் தெரிவித்திருந்தன.
ஆனால், மன்னர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றபோது சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்தாலும், எதிர்பாராத அளவில் மக்கள் மாபெரும் வரவேற்பளித்தார்கள்.
தான் அவுஸ்திரேலியாவின் மன்னராக இருப்பது மக்களுக்குப் பிடிக்கவில்லையானால், அவர்கள் வாக்கெடுப்பு நடத்தி அதை முடிவு செய்யலாம் என்றும், மக்கள் முடிவுக்கும் தான் கட்டுப்படுவதாகவும் சார்லஸ் தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது அவருக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, சார்லஸ் எவ்வளவு காலம் வேண்டுமானாலும், அவர் விரும்பும்வரை, அவுஸ்திரேலியாவின் மன்னராக நீடிக்கலாம் என எழுதியுள்ளன ஊடகங்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |