Optical illusion: இந்த படத்தில் எது முதலில் தெரிகிறது! உங்களது வித்தியாசமான குணங்கள் இதுதானாம்
பொதுவாக அனைவருக்குமே நாம் எப்படிபட்டவர்கள், எந்த மாதிரியான ஆளுமை நம்மிடம் உள்ளது என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும்.
உங்களுடைய பண்புகளை, ஆளுமைகளை தெரிந்து கொள்ள உதவும் ஒரு கருவி தான் optical illusion புகைப்படங்கள்.
இந்த பதிவில் உங்களது மிக வித்தியாசமான பண்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
முதலில் எதை பார்க்கிறீர்கள்?
உங்களது பணி மிகவும் எளிமையானது, மேலே கொடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை நினைவில்கொள்ளுங்கள்.
ஆணின் முகம் தெரிந்தால்,
முதன்முதலாக பார்த்ததும் உங்களுக்கு ஆணின் முகம் தெரிந்தால், நீங்கள் நினைப்பதை பட்டென சொல்லும் குணமுடையவர்கள், அடுத்தவர்கள் பேச வேண்டும் என காத்திருக்க மாட்டீர்கள்.
இது ஒருசில நேரங்களில் உங்களுக்கு அசௌகரியத்தை உண்டாக்கலாம். உங்கள் அனுபவத்தை கொண்டு மற்றவர்களுக்கு உதவ நினைப்பீர்கள், ஒருசில நேரங்களுக்கு எதிரே உள்ள நபரின் கருத்துகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் தரவில்லையோ என்ற நினைப்பை அவர்களுக்கு உண்டாக்கலாம்.
மற்றவர்களின் கதைகளை கேட்பதில் ஆர்வம் உடையவர்கள், என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கூறுவதை விட, மற்றவர்களின் கருத்துகளை காதுகொடுத்து கேட்பது நல்லது.
ரயிலின் இரு பக்கங்களிலும் உள்ள மனிதர்கள் தெரிந்தால்,
மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைப்பதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம், அது கண்ணியமாக இல்லாவிட்டாலும் கூட.
மற்றவர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள பல முயற்சிகளை எடுப்பீர்கள், ஆனால் அவர்களாக வந்துசொல்லாத வரை உங்களுக்கு தகவல்கள் எதுவும் கிடைத்துவிடாது என்பதை மறந்துவிட வேண்டாம்.
வதந்திகள் சிலநேரங்களில் வேடிக்கையாக இருக்கும், ஆனால் அது சிக்கல்களை உண்டாக்க இடம்கொடுக்க வேண்டாம், மற்றவர்களுக்கு பதிலாக உங்களுடைய செயல்களில், உங்களுடைய முன்னேற்றத்தில் கவனத்தை செலுத்துவதே மற்றவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
ரயில் உங்களுக்கு தெரிந்தால்,
சமூக சூழலில் நீங்கள் சரியான நபராக இருக்கவில்லை என்று அர்த்தம், சில விதிகள் முக்கியமானதாக இல்லை என நீங்கள் நினைக்கக்கூடும்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றியே சிந்திக்காமல் பேசக்கூடியவர், இதனால் நண்பர்களை வைத்துக்கொள்வதும் உங்களுக்கு கடினமே.
மற்றவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்றவர்களையும் புரிந்து நடந்து கொள்வதே உங்களுக்கு சிறந்தது.
இளம்பெண்ணின் படம் தெரிந்தால்,
உங்களது வாழ்க்கையே திறந்த புத்தகம் என்று சொல்லலாம், அது உங்களது நண்பராக இருந்தாலும் சரி, அறிமுகம் இல்லாத நபராக இருந்தாலும் சரி உங்களை பற்றி அனைத்தையும் கூறிவிடுவீர்கள்.
உங்களது தனிப்பட்ட விஷயங்களை அதிகம் கூறுவது ஒருநாளில் உங்களுக்கே அது சிக்கல்களை உண்டாக்கும் என்பதை மறக்கவேண்டாம்.
சிலருக்கு உங்களது நேர்மை பிடித்திருந்தாலும், பலர் அதை சங்கடமாகவும், வித்தியாசமாகவும் உணரலாம்.
வெள்ளை நிற உடையுடன் இரு மனிதர்கள் தெரிந்தால்,
இரண்டு நபர்கள் அமர்ந்திருப்பதை நீங்கள் பார்த்தீர்களானால், சமூக சூழலில் பேசுவதற்கே தயக்கம் உடையவராக இருப்பீர்கள்.
குழுவாக வெளியே சென்றிருந்தாலோ, அலுவலக கூட்டமாக இருந்தாலோ மிக அமைதியாக அமர்ந்திருக்கும் நபர் நீங்கள் தான், முக்கியமான கருத்துகளை மட்டுமே எடுத்துரைப்பீர்கள், உங்களது ஈடுபாடு குறைவாகவே இருக்கும்.
மற்றவர்களுடன் பழகுவதில் இருந்து சற்று தள்ளியே இருப்பீர்கள்.
இப்போ சொல்லுங்கள் கமெண்டில், உங்களது குணாதிசயங்கள் எப்படி?
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |