கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை! ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
இந்திய மாநிலம் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்காடான மாவட்டங்கள்
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
இதுவரை கனமழைக்கு 8 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்தின் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு அணைகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆரஞ்சு அலர்ட்
இந்த நிலையில் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 11 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் கொச்சியில் உள்ள கண்ணாமலியில் கடல் உள்வாங்கியதால் 300க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |