உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.., தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்கள்?
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இதனால் சென்னை மற்றம் அதன் புறநகர்ப்பகுதிகளில் நேற்றிரவு முதல் லேசான முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இந்த மழை விட்டுவிட்டு இன்று மதியம் வரை நீடித்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் மணிக்கு 5 முதல் 15 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |