பிரான்சின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆரஞ்சு எச்சரிக்கை
பிரான்சின் சில பகுதிகளுக்கு புயல் தொடர்பில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
பிரான்ஸ் நாட்டின் ஐந்து பகுதிகளுக்கு இன்று (16.8.2022), புயல் தொடர்பான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Aveyron, Tarn, Aude, Hérault மற்றும் Gard ஆகிய பகுதிகளுக்கு இன்று மாலை 4.00 மணி முதல் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகள் ஏற்கனவே மஞ்சள் எச்சரிக்கையின் கீழ் உள்ளன.
பிரான்ஸ் தேசிய வானிலை ஆராய்சி மையம், இன்றைய நாள் பயங்கர புயல் வீசும் நாளாக இருக்கும் என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
வடமேற்கு பகுதியில் துவங்கும் மழை, தென்மேற்கு பகுதிகளை நோக்கி நகர்ந்து, இன்று மதியத்திற்கு மேல் பலத்த புயலாகக்கூடும் என்றும், அது மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
? 5 dpts en #vigilanceOrange
— VigiMétéoFrance (@VigiMeteoFrance) August 16, 2022
Restez informés sur https://t.co/rJ24zzmmy4 pic.twitter.com/Iykmop8oLZ
இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழையும் பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும் என்றும், சில இடங்களில் 20 முதல் 40 மில்லிமீற்றர் அளவுக்கு மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hérault மற்றும் Gard பகுதிகளில் மணிக்கு 120 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஆகவே, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.