தினம் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுங்க! பல நன்மைளை வாரி வழங்கும்
Insomnia
immunity
Bad breath
Blood pressure
Heart problem
By Kishanthini
ஆரஞ்சு பழம் தமிழில் இப்பழத்தை கமலா பழம் என்றழைக்கின்றனர். ஆசிய கண்டதை சார்ந்த இந்த பழம் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயிரிட்டு வருகின்றது.
ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
அந்தவகையில் தற்போது ஆரஞ்சு பழத்தினை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.
- ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.
- ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது.
- ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின்-சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
- ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.
- முடி கொட்டுவது குறைந்து முடியின் வளர்ச்சியை அதிகபடுத்துகிறது.
- வாய் துர்நாற்றத்தை அகற்றும். ஈறுகளில் வீக்கம், சொத்தைப் பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும்.
- தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன்பு ஆரஞ்சு பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US