அடிக்கடி 5 ஆரஞ்சு சுளைகளை சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
ஆரஞ்ச் பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
இப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுஉப்பான பொட்டாசியம் போன்றவை உயர்இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.
இப்பழத்தில் உள்ள விட்டமின் சி-யானது உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை வழங்கி சளி உள்ளிட்ட தொற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
கால்சியம், மெக்னீயம், பாஸ்பரஸ் உள்ள கொடை ஆரஞ்சினை உணவில் சேர்த்து பலமான எலும்புகளைப் பெறலாம்.
5 ஆரஞ்சு சுளைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது சருமத்தினை பளபளக்கச் செய்வதோடு சருமத்தினை வளவளபாக்கி மேம்படுத்துகிறது.
கொடை ஆரஞ்சானது கரையும், கரையாத நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. இவை உணவினை நன்கு செரிக்கச் செய்வதோடு உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றுகிறது.