சளி, இருமலை விரட்டியடிக்கும் ஆரஞ்சு; தினம் 2 பழம் போதும்
குளிர் காலத்தில் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை என்றால் அது சளி தொல்லையாக தான் நிச்சயம் இருக்கும்.
சளி இருமல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
அந்நேரத்தில் ஜலதோஷத்தைத் தடுக்க உதவும் நோயெதிர்ப்பை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் குளிர் காலத்தில் தினமும் இரண்டு ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் மூலம் சளி மற்றும் இருமலில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
ஒரு சிலர் குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் சளி அதிகரித்து விடும் என்ற அச்சத்தில் அதை ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.
குளிர்காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவது மிகவும் நல்லது. சளி-இருமல், போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக நுரையீரலில் கபம் ஏற்பட்டால், இந்தப் பழம் உங்களுக்கு அருமருந்து.
Image Credit: Verdina Anna/Moment/GettyImages
சளி, இருமலை விரட்டியடிக்கும் ஆரஞ்சு
ஆரஞ்சு சாற்றில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் இரண்டு ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு வந்தால், வைட்டமின் சி மூலமாக உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.
ஆரஞ்சுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. உடலில் ஏற்படும் தொற்றுகளுக்கு நிவாரணம் வழங்கும்.
தினமும் சாப்பிடுவதால் முகம் மற்றும் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி தெளிவாகும்.
முகத்தில் வெடிப்பு, வறட்சி போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.
இதை சாப்பிடுவதற்கு மதியம் 11 அல்லது 12 மணி நேரம் சரியானது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
ஆரஞ்சு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆரஞ்சுகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர கலவைகள் நிறைந்துள்ளன.
நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகின்றன மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை வைத்திருக்கவும் உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |