ஆரஞ்சு பழத்தோல் சருமத்தை மிருதுவாக்குமா? எப்படி பயன்படுத்தினால் நன்மையை பெறலாம்?

Beauty Tips
By Kishanthini Sep 07, 2021 09:10 AM GMT
Report

 ஆரஞ்சுப் பழத்தோலில் உள்ள வைட்டமின் சி சத்து தவிர, ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருப்பதால் இவற்றை ஸ்கின் பேக் எனப்படும் முகத்தின் பொலிவைக் கூட்டி வெண்மையாக்கும் சருமப் பராமரிப்பு பூச்சுகளில் மற்றும் மாஸ்க்குகளில் பயன்படுத்தலாம்.

 குறிப்பாக ஆரஞ்சுத் தோல் கிருமி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தொற்றுத் தன்மைகளை கொண்டுள்ளதால் உங்களுடைய எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும். 

அந்தவகையில் ஆரஞ்சுத் தோலை எப்படி எல்லாம் முகத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.  

ஆரஞ்சு பழத்தோல் சருமத்தை மிருதுவாக்குமா?  எப்படி பயன்படுத்தினால் நன்மையை பெறலாம்? | Orange Peel Face Pack

  • தூசிகளால் முகம் களையிழந்து கருத்து போன சருமத்திற்குஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி காய வைத்து பின் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து தயிருடன் கலந்து முகத்துக்குப் பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். 

  •   ஆரஞ்சுத் தோல் கிருமி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தொற்றுத் தன்மைகளை கொண்டுள்ளதால் உங்களுடைய எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும்.

  • ஆரஞ்சுத் தோலை வாரம் ஒரு முறை முகத்துக்கு போட்டு வர முகத்திற்கு பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பிக்கும். தயிருக்கு பதிலாக ஆரஞ்சு பழச்சாறையும் பயன்படுத்தலாம். மிருதுவான சருமத்திற்கு வெளியில் செல்லும் முன் சன் பிளாக் கிரீமை தவறாமல் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முக சருமம் பாதுகாக்கப்படும். 

  • உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து அதை ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும். இதே போல் எண்ணெய் வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசி வரலாம். இதன் மூலம் முகம் படிப்படியாக ஜொலிக்க ஆரம்பிக்கும்.

  •  ஆரஞ்சுத் தோல் மற்றும் தயிர் கலவை ஒரு அற்புதமான சருமப் பராமரிப்பிற்கு உதவும். இது சுருக்கங்களையும் கோடுகளையும் நீக்குவதோடு உங்கள் சருமத்தின் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. 

  •  ஆரஞ்சுத் தோல் மற்றும் வேம்புக் கலவை பருவை எதிர்த்துப் போராட உதவும். இந்த ஸ்கின் பேக் மூலம் எண்ணெய் பசை மிகுந்த மற்றும் பருக்கள் ஏற்படக்கூடிய சருமத்திற்கு நல்ல பலனை பெற முடியும். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US