மின்சாரத்தை சேமிப்பதற்காக கடைகளுக்கு பிரான்ஸ் அரசு பிறப்பிக்க இருக்கும் வித்தியாசமான உத்தரவு
எரிபொருள் பிரச்சினை அரசாங்கங்களை புதிது புதிதாக உத்தரவுகளை பிறப்பிக்கச் செய்துள்ளது.
அரசாங்கங்கள் மின்சாரத்தை மிச்சம் பிடிப்பதற்காகவும், வீணாக்காமல் தவிர்ப்பதற்காகவும், பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
அவ்வகையில், பிரான்ஸ் அரசு கடைகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளது.
அது என்னவென்றால், குளிரூட்டப்பட்டுள்ள, அதாவது ஏர் கண்டிஷனிங் செய்யப்பட்டுள்ள கடைகள், மின்சாரம் வீணாகாமல் தவிர்ப்பதற்காக கடைகளின் கதவுகளை மூடிவைக்கும்படி பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் கடைகளுக்கு 750 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், கடைகளில், 1.00 மணி முதல் 6.00 மணி வரை விளம்பரப்பலகைகளில் நியான் விளக்குகளை, அதாவது வண்ண வண்ண விளக்குகள் உதவியுடன் விளம்பரப்பலகைகளை பயன்படுத்தி ஒளியூட்டுவதற்கும், தடை விதிக்கப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சரான Agnes Pannier-Runacher தெரிவித்துள்ளார்.
இந்த தடைகள் ஏற்கனவே பிரான்சில் சில பகுதிகளில் அமுலில் உள்ள நிலையில், தற்போது அந்த தடைகள் நாடு முழுமைக்கும் உத்தரவிடப்பட உள்ளன.