சுவிட்சர்லாந்தில் 20 ஆண்டுகளாக நபர் ஒருவர் பெற்ற அரசு உதவித் தொகையை திரும்பச் செலுத்த உத்தரவு
சுவிட்சர்லாந்தில் நபர் ஒருவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு உதவித்தொகை பெற்றுவந்துள்ளார்.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டு அவருக்கு பரம்பரை சொத்து மூலம் 261,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கிடைத்துள்ளது. இந்த விடயம் தெரியவந்ததும், உள்ளூர் நிர்வாகம் அவர் இதுவரை பெற்ற உதவித்தொகைக்காக 200,000 சுவிஸ் ஃப்ராங்குகள் திரும்பச் செலுத்தவேண்டும் என அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த தொகை, அவர் 2010இலிருந்து 2019வரை பெற்ற உதவித்தொகைக்கு இணையான தொகையாகும். 2019இலிருந்து அவர் ஓய்வூதியத்தொகையும் பெற்றதுடன், அரசு உதவித்தொகையும் பெற்றுள்ளார்.
உள்ளூர் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் அவர். ஆனால், Bern தீர்ப்பாயம் அவரது கோரிக்கையை நிராகரித்து, அவர் பெற்ற உதவித்தொகையை திருப்பிச் செலுத்தவேண்டும் என்னும் கோரிக்கை சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று கூறிவிட்டது.
ஆக, அரசு உதவித்தொகை என்பது, இலவசமாக கிடைக்கும் ஒரு விடயம் அல்ல, அதை அரசு திருப்பிக் கேட்கவும் வாய்ப்புள்ளது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாக உள்ளது எனலாம்.
ஆனால், அந்த தீர்ப்பாயத்தின் முடிவு இறுதியானதல்ல என்பதால், அவர் தனது வழக்கைத் தொடர்ந்து நடத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.