பிரித்தானியர்கள் உடனடியாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு
ரஷ்ய படைகள் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனுக்குள் ஊடுருவலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, உக்ரைனிலிருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு வெளியுறவு அலுவலகம் தன் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யாவுக்குச் சொந்தமான 130,000 படை வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புடின் உத்தரவிட்டால், உக்ரைனில் வான்வெளித்தாக்குதல் முதலான பயங்கர தாக்குதல்கள் நடக்கலாம் என்றும், அதில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதால், தற்போது அந்நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கும்நிலையில், உடனடியாக வெளியேறுமாறு ஆலோசனை தெரிவித்துள்ளது.
இன்னொரு பக்கம் அமெரிக்கா தன் குடிமக்களை உக்ரைனை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியமும் அத்தியாவ பணியிலிருப்போர் தவிர்த்து மற்ற தூதரக அலுவலர்கள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.