மூன்று குழந்தைகள், ஆசிரியரை சுட்டுக்கொன்ற 16 வயது சிறுவன்: தெரிய வந்த அதிர்ச்சி தகவல்
Oregon gunman used shotgun purchased by mother: அமெரிக்காவில் ஆசிரியர் உட்பட மூன்று சிறார்களை சுட்டுக்கொன்ற சிறுவன் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், பதின்ம வயது துப்பாக்கிதாரி குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பதின்ம வயது துப்பாக்கிதாரி
ஓரிகானின் பெண்ட் நகரில் பதின்ம வயது துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் மூன்று சிறார்கள் மற்றும் ஆசிரியர் என் நால்வர் கொல்லப்பட்டனர்.
இதனை உறுதிப்படுத்திய காவல்துறைத் தலைவர் மைக் கிரான்ட்ஸ், "இது ஒரு பயங்கரமான துயரச் சம்பவம்; இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
இந்த நிலையில், குறித்த துப்பாக்கிதாரி பயன்படுத்திய Shotgun துப்பாக்கி அவரது தாய் வாங்கித் தந்தது என தெரிய வந்துள்ளது.
குறித்த 16 வயது துப்பாக்கிதாரி, தனது தாய் வாங்கித் தந்ததாக காவல்துறை கூறும் பம்ப்-ஆக்சன் ஷாட்கன்னைப் பயன்படுத்தி தன்னைத் தயார்படுத்திக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் கண்காணிப்பாளர் ஸ்டீவன் குக், "இந்த அர்த்தமற்ற துயரச் சம்பவத்தால் நாங்கள் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்துள்ளோம்" என தெரிவித்தார்.
