கனடாவில் அவசரமாக திரும்பப்பெறப்படும் ஆர்கானிக் கேரட்கள்., மோசமான தொற்று பரவும் அபாயம்
கனடா மற்றும் அமெரிக்காவில் விற்பனையாகிய ஆர்கானிக் கேரட் அவசரமாக திரும்பப்பெறப்படுகிறது.
இந்த ஆர்கானிக் கேரட்டில் E.coli தொற்றுபரவுவதாகக் கண்டறியப்பட்டதையடுத்து, அவற்றை மொத்தமாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 39 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க நோய்களை கட்டுப்படுத்தும் மற்றும் தடுப்பதற்கான மையம் (CDC) மற்றும் உணவுப் பாதுகாப்பு நிர்வாகம் (FDA) தெரிவித்துள்ளது.
Grimmway Farms வழங்கிய கேரட் வகைகள் இந்த தொற்றுக்கு காரணமாக இருக்கலாம்.
இந்த கேரட் வகைகள் Walmart, Loblaw, Target, Kroger, Whole Foods, Amazon மற்றும் Trader Joe's போன்ற கடைகளில் விற்பனையாகியுள்ளன.
இதில் President's Choice மற்றும் Compliments போன்ற பிராண்டுகள் உள்ளது.
பாதிப்பு மற்றும் அறிகுறிகள்
- தொற்றின் காரணம்: இந்த கேரட் வகைகள் Shiga toxin-producing Escherichia coli (E. coli) O121:H19* என்ற அபாயகரமான பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
- அறிகுறிகள்: தீவிர வயிற்று வலி, இரத்த கலந்த மலச்சிக்கல், காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் ஆகியவை அடங்கும்.
- பாதிப்புக்குள்ள குழுக்கள்: சிறுவர்கள், முதியோர் மற்றும் நோயெதிர்ப்பு திறன் குறைந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும்.
திரும்ப பெறப்பட்ட தயாரிப்புகள்
2024 ஆகஸ்ட் 14 முதல் அக்டோபர் 23 வரை கிடைத்த அனைத்து கேரட் பைகள் திரும்பப்பெறப்படுகிறது.
2024 செப்டம்பர் 11 முதல் நவம்பர் 12 வரை உபயோகிக்க உகந்த திகதி கொண்ட பேபி கேரட் பைகள் திரும்பப்பெறப்படுகிறது
கிரிம்வே நிறுவனம் இதுகுறித்து தன்னுடைய பயிர்ப்பு, அறுவடை மற்றும் செயலாக்க நடைமுறைகளை மீளாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பான விசாரணையில் சுகாதார அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Organic carrots sold in Canada, U.S. recalled, E.coli outbreak in Organic carrots