வங்கி வேலையை விட்டு ஆர்கானிக் விவசாயம்! பல கோடி சம்பாதிக்கும் இளைஞர்
8 வருடங்களாக பார்த்த வங்கி வேலையை விட்டு ஆர்கானிக் விவசாயம் மூலம் பல கோடியில் வருமானம் பெறும் நபரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
யார் இவர்?
கர்நாடகா மாநிலம், பெங்களூர் இன்சூரன்ஸ் பேங்கிங் கிளைம் பிரிவில் 8 ஆண்டுகளாக அமித் கிஷன் என்பவர் பணியாற்றினார்.
அப்போது, முக்கியமாக அமித் செய்யும் கிளைம் எல்லாம் மெடிக்கல் தொடர்புடையது தான். அதுவும் குறிப்பாக கேன்சர் தொடர்புடையதாக தான் இருக்கும்.
அப்போது, அமித் தனது வாடிக்கையாளர் ஒருவரை கேன்சரால் இழந்தார். அப்போது தான் அமித் கிஷன், வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கேன்சர் நோய்க்கான அடித்தளம் என்ன என்பதை ஆராய ஆரம்பித்தார்.
ஆர்கானிக் விவசாயம்
இதனைத்தொடர்ந்து அமித் கிஷன், நாம் வாழும் வாழ்வு, உண்ணும் உணவு தான் இந்த நோய்க்கான காரணம் என்பதை அறிந்து, தான் பார்த்துக் கொண்டிருக்கும் பேங்க் வேலையை விட்டார்.
பின்னர், கடந்த 2019 ஆம் ஆண்டு அமித் கிஷன் தனது சகோதரர் அஷ்ரித் உடன் சேர்ந்து 1.5 ரூபாய் கடனில் Hebbevu Farms என்ற நிறுவனத்தை உருவாக்கினர்.
அப்போது இவர்களிடம் 15 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது. பின்பு, அந்த நிலத்தில் எப்படி ஆர்கானிக் விவசாயம் செய்யலாம் என்பது பற்றி ஆராய தொடங்கினர்.
இதனைத்தொடர்ந்து அமித், கடந்த 5 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட தானியங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்து வருகிறார்.
தற்போது இவரிடம், 700 பசு மற்றும் எருமை மாடுகள் உள்ளது. அதோடு இவர், பால் பொருட்கள் மற்றும் எண்ணெய் பொருள்களை விற்பனை செய்து வருகிறார்.
மேலும், ஒரு நாளைக்கு 6 டன் காய்கறிகளும், 1500 லிட்டர் பாலையும் விற்பனை செய்கிறது. இவரிடம், 15 ஏக்கராக இருந்த நிலம் 650 ஏக்கராக உள்ளது. இதன் மூலம், ஒரு வருடத்திற்கு 21 கோடி ரூபாய் வரை அமித் கிஷன் வருமானம் பெறுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |