கர்ப்பமாக இருந்தபோது கொரோனா தொற்றுக்கு ஆளான பெண்... ஒன்பது குழந்தைகளை தவிக்க விட்டு மறைந்த பரிதாபம்
கனடாவின் எட்மண்டனில் எட்டுக் குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை கொரோனா தாக்கியுள்ளது.
Jennifer Rosebluff-Thomas (35) என்ற அந்த பெண்ணை கொரோனா தாக்கும்போது, அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Jenniferஇன் நிலைமை திடீரென மோசமானதால் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
அப்போது அவர் தன் சகோதரியான Carol Charlesஇடம், என்னை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்கிறார்கள், நான் சாகப்போகிறேன் என்று கூறி பயந்து அழுதிருக்கிறார்.
இதற்கிடையில் அவசர அவசரமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்கவேண்டிய ஒரு மோசமான நிலை உருவாகியிருக்கிறது.
அவ்வளவுதான், அப்புறம் Jenniferக்கு சுய நினைவு திரும்பவே இல்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு தான் பெற்ற குழந்தையை கைகளில் சுமக்காமலேயே உயிரை விட்டிருக்கிறார் அவர்.
Jenniferக்கு எட்டு குழந்தைகள் இருந்த நிலையில், அவர்களது பாதுகாப்பு கருதியாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு அவரை வற்புறுத்தியிருக்கிறார் அவரது சகோதரியான Carol. ஆனால் அவர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை.
தற்போது தன் சகோதரியின் துயரக் கதையைப் பகிர்ந்து, கர்ப்பிணிகளையும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார் Carol.
கொரோனா நிஜமாகவே இருக்கிறது, என் சகோதரி அருமையான ஒரு தாய். ஆனால், இப்போது அவளது ஒன்பது குழந்தைகளும் தாயில்லாமல் வாழவேண்டியிருக்கிறது என கண்ணீர் மல்க கூறுகிறார் Carol.