இவருடன் ஒரே ஒரு Selfie எடுக்க ரூ.25 லட்சமாம்! யார் அந்த Instagram பிரபலம்?
ஒரு செல்ஃபிக்கு 25 லட்சம் வாங்கும் Instagram பிரபலம் ஓர்ரி என்பவரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
ஓர்ரி (orry)
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மில்லியன்ஸ் ஃபாலோயர்ஸ்களுடன் வலம் வரும் ஓர்ரி என்பவர், பாடகராகவும், Stylist ஆகவும், Fashion Designer ஆகவும் பிரபலமானவர்.
இவர் தனது Instagram பக்கத்தில், வெளிநாட்டுச் சுற்றுலா, பார்ட்டி, பல்வேறு விதமான ஆடைகள், காஸ்டியூம்கள் என தனது புகைப்படங்களை பதிவிடுவார். அண்மையில் கூட தீபிகா படுகோன், ஜான்வி கபூர், நீடா அம்பானி, சல்மான் கான் ஆகியோருடன் Selfie எடுத்து பதிவிட்டது வைரலானது.
இந்நிலையில், இவர் தன்னுடன் ஒரு Selfie எடுப்பதற்கு ரூ.25 லட்சம் வசூல் செய்வதாகவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்க லட்சங்களில் வசூல் செய்வதாகவும் செய்திகள் பரவி வருகிறது.
அதுமட்டுமல்லாமல், உணவு, உடை, பயணங்கள் மற்றும் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்வதற்கு தனித்தனி மேனேஜர்களை வைத்திருப்பது ஆச்சரியப்பட வைத்தது.
செல்ஃபிக்கு ரூ.25 லட்சம்
இந்நிலையில் ஓர்ரி நேர்காணல் ஒன்றில் பேசுகையில், "என்னுடன் போட்டோ எடுப்பதற்கு ரூ.25 லட்சம் வாங்குகிறேன். நானாக எடுத்துக் கொண்டால் வாங்குவதில்லை. அவர்கள் ஆசைப்பட்டால் அதற்குக் கட்டணம் வசூலிப்பேன்.
ஒரு நிகழ்ச்சிக்கு எனக்கு ரூ.20 முதல் 25 லட்சம் வரை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். என்னை அதிக கட்டணம் கொடுத்து நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள்.
எனக்கு பாலிவுட்டில் நண்பர்கள் அதிகம். நான் இன்ஸ்டாகிராமில் நான் பிரபலமாவதற்கு முன்பே அவர்கள் எனக்கு கிடைத்தார்கள். அதனால் தான் அவர்களுடன் போட்டோ எடுத்து பதிவிடுகின்றேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |