திருமணத்தால் வங்கி ஊழியர் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்... நிறுவனத்தின் மதிப்பு ரூ 190,512 கோடி
பல வெற்றிகரமான தொழிலதிபர்கள் தங்கள் தொழில் முறை பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு மற்ற நிறுவனங்களில் வேலை செய்துள்ளனர்.
வங்கி அதிகாரியாக
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்திய ஆட்டோமொபைல் துறையை முடுக்கிவிட்ட ஒசாமு சுஸுகி. சுமார் 40 ஆண்டு காலம் சுஸுகி நிறுவனத்தை வெவ்வேறு பதவிகளில் வழி நடத்தியுள்ளார்.
ஒசாமு டிசம்பர் 27, 2024 அன்று ஆபத்தான நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் காரணமாக தமது 94 வயதில் காலமானார். சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 190,512 கோடி என்றே கூறப்படுகிறது.
1930ல் Osamu Matsuda என்ற பெயரில் பிறந்த அவர், ஜப்பானில் வங்கி அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னாளில் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனின் குலபதியான மிச்சியோ சுஸுகியின் பேத்தி ஷோகோ சுஸுகியை மணந்ததன் பின்னரே அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.
குடும்பத் தொழிலுக்கு ஆண் வாரிசுகள் இல்லாதபோது ஜப்பானிய வழக்கப்படி ஒசாமு சுஸுகி தனது மனைவியின் குடும்பப்பெயரை எடுத்துக் கொண்டார். சுவோ பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் பட்டம் பெற்றவர் ஒசாமு.
பின்னர் ஏப்ரல் 1958ல் Suzuki Motor Co Ltd நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தார். நவம்பர் 1963ல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். டிசம்பர் 1967ல் இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்குநரானார்.
மாருதி உத்யோக் லிமிடெட்
ஜூன் 2000ல் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனின் தலைவரானார். அவரது மூத்த மகன் தோஷிஹிரோ சுஸுகி நிர்வாகப் பொறுப்பேற்றதன் பின்னர். ஜூன் 2021ல், அவர் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இந்தியாவில் அந்த காலகட்டத்தில் ஒரு சாத்தியமான ஆட்டோமொபைல் நிறுவனம் செயல்பட முடியும் என யாரும் நம்பாதபோது, அந்த சவாலை எதிர்கொண்டு சாதித்தவர் ஒசாமு சுஸுகி.
1981ல் மாருதி உத்யோக் லிமிடெட் என்ற கூட்டு முயற்சியை உருவாக்க அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்தார். மாருதி உத்யோக் லிமிடெட் பின்னர் மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் ஆனது.
2007ல் இந்திய அரசாங்கம் வெளியேறியதை அடுத்து சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருந்தது. ஒசாமு சுஸுகி, மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் கெளரவத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |