ஓவருக்கு 12 பந்துகள்., ஒரே பந்தில் 15 ஓட்டங்கள்., BPL போட்டியில் அரிய நிகழ்வு
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் (BPL) வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரு ஓவருக்கு 12 பந்துகளை வீசியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அதே ஓவரில் அவர் ஒரு பந்துக்கு 15 ஓட்டங்களைக் கொடுத்துள்ளார். அதுவும் ஆட்டத்தின் முதல் பந்து.
கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர் தனது ஒரு பந்துக்கு 15 ஓட்டங்கள் கொடுப்பது அரிதான நிகழ்வாகும். ஆனால், இது ஆண்டின் கடைசி நாளான இன்று செவ்வாய்க்கிழமையும் நடந்துள்ளது.
குல்னா டைகர்ஸ் மற்றும் சிட்டகாங் கிங்ஸ் (Chittagong Kings) அணிகளுக்கு இடையே இப்போட்டி நடைபெற்றது.
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் மூன்றாவது போட்டியில் குல்னா டைகர்ஸ் (Khulna Tigers) அணியின் பந்துவீச்சாளர் ஒஷேன் தாமஸ் (Oshane Thomas) தனது முதல் பந்துக்கு 15 ஓட்டங்களைக் கொடுத்துள்ளார்.
ஒரு பந்தில் 15 ஓட்டங்கள் எடுத்தது எப்படி?
204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்டகாங் கிங்ஸ் அணி களமிறங்கியது. கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் புதிய பந்தை ஓஷேன் தாமஸிடம் ஒப்படைத்து முதல் ஓவரை வீசும் பொறுப்பை வழங்கினார்.
தாமஸின் முதல் பந்து நோ பால் ஆனது, ஃப்ரீ ஹிட் கொடுக்கப்பட்டது. ஆனால், எதிரில் நின்ற சிட்டகாங் கிங்ஸ் தொடக்க வீரர் முகமது நசீம் இஸ்லாம் ஃப்ரீ ஹிட்டில் ஓட்டம் எதுவும் எடுக்க முடியவில்லை.
தாமஸ் வீசிய இரண்டாவது பந்தும் நோ பால், அதில் நசீம் சிக்சர் அடித்தார். மேலும், நசீமுக்கு ஃப்ரீ ஹிட் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் தாமஸ் தொடர்ச்சியாக 2 வைடு பந்துகளை வீசினார்.
இதையடுத்து நசீம் ஒரு பவுண்டரி அடித்தார், ஆனால் அம்பயர் மீண்டும் நோ பால் என்று கூறினார்.
தாமஸால் இரண்டு பந்துகளைக் கூட முடிக்க முடியவில்லை. இதனால், முதல் பத்துக்கே சிட்டகாங் கிங்ஸின் எண்ணிக்கை 15-ஐ எட்டியது.
மேலும் அவர் அந்த முதல் ஓவரை முடிக்க மொத்தம் 12 பந்துகளை வீசியுள்ளார். இந்த ஓவரில் மட்டும் 18 ஓட்டங்களைக் கொடுத்துள்ளார்.
இருப்பினும், குல்னா டைகர்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |