31 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 61 ரன் விளாசியும் வீண்: ஆல்அவுட் ஆகி தோல்வியுற்ற அணி
சூப்பர் ஸ்மாஷில் ஒடாகோ அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெல்லிங்டனை வீழ்த்தியது.
நியூசிலாந்தில் நடந்த வரும் சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடரில் ஒடாகோ மற்றும் வெல்லிங்டன் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ஒடாகோ (Otago) அணியில் டேல் பிலிப்ஸ் 25 பந்துகளில் 43 ஓட்டங்களும், மேக்ஸ் ச்சு 23 பந்துகளில் 37 ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் ஒடாகோ அணி 7 விக்கெட்டுக்கு 164 ஓட்டங்கள் குவித்தது. ஹாட்ஸ்ஹோர்ன், யங்ஹஸ்பண்ட் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய வெல்லிங்டன் அணி 28 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் (Michael Bracewell) வாணவேடிக்கை காட்டினார்.
அணியின் ஸ்கோர் 124 ஆக உயர்ந்தபோது பிரேஸ்வெல் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் குவித்தார்.
அவரது விக்கெட்டுக்கு பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, வெல்லிங்டன் அணி 18.4 ஓவர்களில் 149 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜேக்கப் டுஃபி 3 விக்கெட்டுகளும், ஹஸில்ட்டின், பேக்கன் மற்றும் லாக்ரோஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |