உக்ரைனுக்கு மற்ற நாடுகளும் உதவவேண்டும்: ஜேர்மனி வலியுறுத்தல்
ஜேர்மனி ஏற்கனவே உக்ரைனுக்கு ஆதரவளித்துவருகிறது, இப்போது அந்த விடயத்தில் மற்ற நாடுகளும் தங்கள் பங்கைச் செய்யவேண்டும் என ஜேர்மன் நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம்
உக்ரைனுக்குக் கூடுதல் நிதி உதவி தேவைப்படுகிறது என்று கூறியுள்ள ஜேர்மன் நிதியமைச்சரான Christian Lindner, சர்வதேச நாணய நிதியம் அது தொடர்பான ஒரு புதிய திட்டத்தை தீட்டிவருகிறது. அதை ஜேர்மனி ஆதரிக்கிறது. ஆனால், அந்த சுமையையும் அபாயங்களையும் மற்றவர்களும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றார்.
இது ஒரு சில நாடுகளின் கடமை மட்டும் அல்ல, அனைத்து சர்வதேச நாணய நிதிய நாடுகளின் கடமையுமாகும் என்றார் அவர்.
மார்ச் மாத இறுதியில், உக்ரைனுக்கு உதவும் புதிய திட்டம் ஒன்றை சர்வதேச நாணய நிதியம் தீட்டிவருவதாக நிதியமைச்சக வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.