கனேடிய நகரம் ஒன்றில் மருத்துவமனைகளில் ஊழியர் தட்டுப்பாடு: எடுக்கப்படவிருக்கும் ஆபத்தான முடிவு
கனடாவின் Ottawa நகரில், முக்கிய மருத்துவமனைகளில் கடுமையான ஊழியர்கள் தட்டுப்பாடு நிலவுவதால், வெளிப்படையாக கொரோனா அறிகுறிகள் கொண்ட ஊழியர்களைக்கூட பணிக்கு வர அழைப்பிக்க இருப்பதாக ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 5 திகதியிடப்பட்ட The Ottawa Hospital மருத்துவமனை ஆவணம் ஒன்று, கொரோனா தொற்றியவருடன் தொடர்பிலிருந்த, மற்றும், கொரோனா தொற்று இருக்கும் மருத்துவமனை ஊழியர்களையும் பணி செய்ய அனுமதிக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதாவது, மருத்துவமனை இயங்குவதில் மிகவும் மோசமான சூழல் ஏற்படும் நிலையில், கொரோனா தொற்று இருக்கும் மருத்துவமனை ஊழியர்களையும் பணிக்கு அழைக்க இருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஆனால், செவிலியர்களோ, அப்படி கொரோனா தொற்று இருக்கும் மருத்துவமனை ஊழியர்களையும் பணிக்கு அழைப்பிப்பதால், எளிதில் தொற்றுக்கு ஆளாகும் அபாயத்திலுள்ள நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகலாம் என கவலை தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், The Ottawa Hospital (TOH) செய்தித்தொடர்பாளர் ஒருவர், மருத்துவமனை ஊழியர்கள் இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலைமை, கொரோனா தொற்று இருக்கும் மருத்துவமனை ஊழியர்களையும் பணிக்கு அழைப்பிப்பதால் உருவாகும் அபாயத்தை விட மோசமாகும் நிலையில் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், இதுவரை The Ottawa Hospital அப்படி கொரோனா தொற்று இருக்கும் மருத்துவமனை ஊழியர்கள் யாரையும் பணிக்கு அழைக்கும் நிலை இதுவரை உருவாகவில்லை என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.