பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகில் இருந்த இந்தியர்கள்...
நேற்று ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோர் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளார்கள்.
நடந்தது என்ன?
நேற்று முன்தினம் இரவு, 10.00 மணியளவில், படகொன்றில் பிரான்ஸ் நாட்டிலுள்ள கலாயிஸ் துறைமுகத்துக்கு தெற்கே அமைந்துள்ள Ambleteuse கடற்கரையிலிருந்து பிரித்தானியா நோக்கி ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறு படகொன்றில் புறப்பட்டுள்ளார்கள் பல நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்.
Credit: Ruckas
அதிகாலை 1.53மணியளவில், பிரான்சிலுள்ள தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு வாட்ஸ் ஆப் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அந்த படகில் ஏதோ பிரச்சினை என தகவல் கிடைக்கவே, பிரான்ஸ் தரப்பிலிருந்தும், பிரித்தானிய தரப்பிலிருந்தும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குப் புறப்பட்டுள்ளார்கள்.
சம்பவ இடத்துக்குச் சென்றபோது, படகு ஒன்று தன்ணீரில் கவிழ்ந்து படகிலிருந்தவர்கள் பலர் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்கள் அதிகாரிகள்.
Credit: Paul Edwards
எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?
அந்த படகு கவிழ்ந்த சம்பவம் இப்போது சர்வதேச சம்பவமாகியுள்ளது. காரணம், அந்த படகில் பல நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் பயணித்துள்ளார்கள்.
அல்பேனியா, ஆப்கானிஸ்தான், ஈராக், செனகல் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அந்தபடகில் பயணித்ததாக The Sun பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Credit: Paul Edwards