எங்கள் தாயாரின் மறைவுக்கு இது தான் முதன்மை காரணம்: கொந்தளித்த இளவரசர் வில்லியம்- ஹரி
பிபிசி ஊடகவியலாளர் Martin Bashir முன்னெடுத்த நெறிமுறையற்ற நேர்காணலே தங்கள் தாயார் டயானாவின் திடீர் மறைவுக்கு காரணம் என இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி முதன் முறையாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஊடகவியலாளர் மார்ட்டின் பஷீர் குறித்த நேர்காணலுக்காக நெறிமுறையற்ற விதமாக நடந்து கொண்டதாகவும், அதுவே தமது தாயாரின் சித்தப்பிரமைக்கும் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கும் வழிவகுத்தது என வில்லியம் கொந்தளித்துள்ளார்.
அந்த நேர்காணலில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் டயானாவை காயப்படுத்தியதாக கூறும் இளவரசர் வில்லியம், அதுவே தமது பெற்றோரின் விவாகரத்து நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது எனவும், அந்த விவகாரங்கள் எஞ்சிய குடும்ப உறுப்பினர்களையும் காயப்படுத்தியது என்றார்.
இளவரசர் வில்லியம் கூறியுள்ள அதே கருத்தையே, இளவரசர் ஹரியும் தெரிவித்துள்ளார். தாயாரின் மறைவுக்கு முதன்மை காரணம் பிபிசியில் வெளிவந்த அந்த நேர்காணல் மட்டுந்தான் என குறிப்பிட்டுள்ள ஹரி, ஒரு ஊடக நிறுவனத்தின் நெறிமுறையற்ற நடவடிக்கைகள் ஒரு உயிரை அபாண்டமாக பறித்துக்கொண்டது என்றார்.
1997ல் அந்த கோரவிபத்தில் இளவரசி டயானா இறப்பதற்கு முன்னர், தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை அவர் கண்டிப்பாக உணர்ந்திருப்பார் என இளவரசர் வில்லியம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த நேர்காணலானது இப்போது எந்த சட்டபூர்வமான தன்மையையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறினார்.
மட்டுமின்றி டயானாவின் உறவினர்களும், அவரது மரணத்திற்கு பிபிசி ஊடக நிறுவனமே காரணம் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.