முதல் முறையாக கால்பந்தின் உயரிய விருதை வென்ற பிரான்ஸ் வீரர்: அதிகமுறை வென்றவர் யார்?
கால்பந்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பலோன் டி'ஆர் விருதை பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பேலே வென்றார்.
உஸ்மான் டெம்பேலே
பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் அணிக்காக விளையாடி வரும் 28 வயது பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பேலே, கடந்த சீசனில் 35 கோல்கள் அடித்தார்.
இதன்மூலம் அவர் உயரிய விருதுகளில் ஒன்றான பலோன் டி'ஆர் (Ballon d'Or) விருதை முதல் முறையாக வென்றுள்ளார்.
டெம்பேலே பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் (PSG) முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.
அதிகமுறை வென்றவர்
இந்த விருதினை அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) 8 முறை வென்றுள்ளார். இவர்தான் அதிகமுறை இவ்விருதை பெற்றவர் ஆவார்.
போர்த்துக்கல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 5 முறை இந்த விருதை பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |