மன்னர் சார்லஸால் வெளியேறிய அரண்மனையின் முக்கிய அதிகாரி: கோபத்தில் கொந்தளித்த இளவரசர் வில்லியம்
ஹரி- மேகன் தம்பதி கண்டிப்பாக வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என இளவரசர் வில்லியம் நம்பிக்கை
ராணியாரின் பிள்ளைகளான சார்லஸ், ஆண்ட்ரூ காரணமாக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ காரணமாக அரண்மனையில் இருந்து வெளியேறிய அதிகாரி தொடர்பில் இளவரசர் வில்லியம் கடும் சீற்றம் கொண்டதாக தகவல் கசிந்துள்ளது.
குறித்த நபர் அரண்மனை பொறுப்பில் நீடித்திருந்தால், ஹரி- மேகன் தம்பதி கண்டிப்பாக வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என இளவரசர் வில்லியம் நம்புவதாகவும் தெரியவந்துள்ளது.
@getty
முன்னாள் பிரித்தானிய ராணுவ அதிகாரியும் ராணியாருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே காதாகவே செயல்பட்டவருமான Sir Christopher Geidt என்பவர் தொடர்பிலே இளவரசர் வில்லியம் சீற்றம் கொண்டுள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் நீண்ட 15 ஆண்டுகாலம் அவர் பணியாற்றியுள்ளார். ராணியாரின் பிள்ளைகளான சார்லஸ் மற்றும் ஆண்ட்ரூ காரணமாக 2017ல் அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
Sir Christopher Geidt வெளியேறியதால் மிகவும் பாதிக்கப்பட்டது இளவரசர் வில்லியம் என்றே கூறப்படுகிறது. இதனால் அரண்மனையில் முக்கிய பொறுப்பில் இருந்த பலரிடமும், இந்த விவகாரம் தொடர்பில் இளவரசர் வில்லியம் கோபத்துடன் நடந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.
@getty
மேலும், Sir Christopher Geidt வெளியேறிய பின்னர், ராணியாருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்ததாகவும், அது சரிசெய்ய முடியாதபடி சேதமடைந்ததாகவும், இதனாலையே, ஹரி- மேகன் தம்பதி அரண்மனையை விட்டு வெளியேறும் சூழலும் உருவானதாக கூறப்படுகிறது.
2002ல் பக்கிங்ஹாம் அரண்மனையில் பணியில் சேர்ந்த Sir Christopher Geidt மிக விரைவிலேயே ராணியாரின் மிக நெருக்கமான வட்டத்திற்குள் வந்ததாகவும் கூறப்படுக்கிறது. ராணியாரின் மன நிலையை மிகச் சரியாக புரிந்துகொண்டு, குடும்ப உறுப்பினர்களிடம் உரையாடுபவர் இந்த Sir Christopher Geidt.
ஆனால் அப்போதைய வேல்ஸ் இளவரசரான சார்லஸுடன் பல சந்தர்ப்பங்களில் கருத்து மோதலில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, ராஜகுடும்பத்தில் இருந்து தாம் ஒதுக்கப்படுவதற்கு காரணம் Sir Christopher Geidt என இளவரசர் ஆண்ட்ரூ நம்பியதும், முதன்மை காரணமாக கூறப்படுகிறது,
@getty
மேலும், ராணியாரின் மறைவுக்கு பின்னர் செயல்படும் ராஜகுடும்ப வட்டத்தை சுருக்க வேண்டும் என்ற ஆலோசனையை அப்போதைய வேல்ஸ் இளவரசரான சார்லஸுக்கு ஆலோசனை வழங்கியவரும் Sir Christopher Geidt தான் என்பதால் இளவரசர் ஆண்ட்ரூ கடும் அதிருப்தியில் இருந்தார் எனவும் கூறப்படுகிறது.
இந்த மொத்த காரணங்களால் Sir Christopher Geidt 2017ல் வெளியேற, இளவரசர் வில்லியம் மனமுடைந்து போயுள்ளார்.
இதனாலையே, தமது கோபத்தை முக்கிய அதிகாரிகளிடம் அவர் கொட்டியதாக கூறப்படுகிறது.