லண்டனில் வெவ்வேறு சமயத்தில் மனிதர்களை பாய்ந்து வந்து கடித்த ஒரு நாய்! பொலிசார் எச்சரிக்கை
லண்டனில் வெவ்வேறு தருணங்களில் 2 பேரை ஒரு நாய் கடித்த நிலையில் கட்டுப்பாடு இல்லாத 'ஆபத்தான' நாய் அது என அறிவிப்பு வெளியிட்டு பிரிட்டீஷ் போக்குவரத்து பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
கடித்த நாய்
அதன்படி கடந்த ஜூலை 14ஆம் திகதி Berkshireல் உள்ள ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ஒரு நாய் கடித்தது. அடுத்த சில மாதங்கள் கழித்து அக்டோபர் 27-ல் ரயில்வே ஊழியரை நோக்கி பாய்ந்து வந்த அதே நாய் கையில் கடித்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக பிரிட்டீஷ் போக்குவரத்து பொலிசார் விசாரித்து வரும் நிலையில் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், குறித்த நாயை கட்டுப்பாடு இல்லாத ஆபத்தான நாய் என விவரித்துள்ளனர்.
mylondon
புகைப்படம்
மேலும் வெள்ளை நிற நாயை கையில் வைத்திருக்கும் நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். அந்த நபரிடம் அது தொடர்பில் தகவல்கள் இருக்கும் என பொலிசார் கருதுகின்றனர்.
அவரை அடையாளம் கண்டாலோ அல்லது அவர் குறித்து தகவல் தெரிந்தாலோ தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.