இளவரசர் ஹரி மேகன் தம்பதியருக்கு மக்களிடையே கிடைத்துள்ள திடீர் ஆதரவு...
இளவரசர் ஹரி, அவரது மனைவி மேகன் குறித்து ஒருவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அந்த புத்தகம் குறித்த விவாத நிகழ்ச்சி ஒன்றைத் தொடர்ந்து, ஹரி மேகனுக்கு ஆதரவாக மக்கள் பலர் குரல் கொடுத்துள்ளார்கள்.
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ள ஒருவர், பிரபல பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.
Valentine Low என்னும் அந்த எழுத்தாளர் தனது புத்தகம் குறித்து விளக்கும்போது, ஹரியின் மனைவி மேகனுடைய தொல்லைகளுக்குத் தப்பி சமாளித்த ஒரு கூட்டம் அரண்மனையில் இருக்கிறது என்பது போன்ற ஒரு விடயம் விவாதத்தில் இடம்பெற்றது.
ஆனால், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை தங்கள் வீடுகளிலிருந்தவண்ணம் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு மேகனை விமர்சித்தது பிடிக்கவில்லை என்பது இணையத்தில் வெளியான கருத்துக்களிலிருந்து தெரியவந்துள்ளது.
ட்விட்டரில் ஏராளமானோர் ஹரி மேகன் தம்பதியருக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
Image: itv
ஹரி மேகனை தொல்லை செய்யாதீர்கள், அவர்களே இந்த தொல்லைகள் எல்லாம் வேண்டாம் என்றுதான் அவ்வளவு தூரம் போயிருக்கிறார்கள். வதந்திகளை வைத்து ஒருவர் புத்தகம் எழுதியிருக்கிறாராம், என்கிறார் ஒருவர்.
மற்றொருவர், வெறும் கிசுகிசுக்களை வைத்து ஒருவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். உலகத்தில் வேறு விடயங்களே இல்லையா, இதைப்போய் காலை செய்திகளில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்களே என்கிறார்.
எலிசபெத் என்னும் பெயரில் எழுதும் ஒருவர், உண்மையில் அரண்மனையில் என்ன நடக்கிறது என்பது யாருக்குமே தெரியாது, வதந்திகளை வைத்து புத்தகம் எழுதாதீர்கள் என்கிறார்.
மற்றொருவர், புரளிகளை வைத்து ஒருவர் புத்தகம் ஒன்று எழுதி அதை எப்படியாவது விற்கப் பார்க்கிறார் ஒருவர், மேகனை தனியாக விடுங்கள், அவரை வேண்டுமென்றே வில்லியாகக் காட்ட நீங்கள் கஷ்டப்பட்டு முயற்சி செய்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.