பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி
Over 600 Flights Cancelled in Uk After air traffic control disruption: பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நுற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
பிரித்தானியாவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பல விமான நிலையங்களில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
As of 1700 UTC, 625 flights have been canceled at airports in the UK following an earlier technical problem at NATS’ Shanwick ATC facility.
— Flightradar24 (@flightradar24) September 8, 2026
easyJet: 218
British Airways: 132
Ryanair 41
KLM 37
Eurowings 22 pic.twitter.com/4hHZYmjFJv
Flightradar24 தரவுகள் படி, மாலை 6 மணி நிலவரத்தின் கீழ் பிரித்தானியாவில் 625 விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதில், பிரிட்டிஷ் ஏர்வேஸின் 132 விமானங்கள் , ஈசிஜெட் நிறுவனத்தின் 218 விமானங்கள், ரயான்ஏர் நிறுவனத்தின் 41 விமானங்கள், கேஎல்எம் நிறுவனத்தின் 37 விமானங்கள் மற்றும் யூரோவிங்ஸ் நிறுவனத்தின் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
யூரோ கட்டுப்பாட்டு அமைப்பின்(Eurocontrol) தரவுகள் படி, தெற்கு இங்கிலாந்தில் பறந்த 590 விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீத்ரோ விமான நிலையத்தில் மட்டும் 132 விமான புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 199 விமானங்கள் தாமதம் செய்யப்பட்டுள்ளன.
இந்த விமான ரத்து மற்றும் தாமதத்தின் காரணமாக கிட்டத்தட்ட 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |