கொரோனா தடுப்பூசி! 70 வயதிற்கு மேற்பட்டவரா நீங்கள்... பிரித்தானியா சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு
70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் கொரோனா தடுப்பூசி இதுவரை பெறவில்லை என்றால், அதற்காக NHS-ல் பதிவு செய்து கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பிரித்தானியாவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன் படி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட கூடியவர்கள், மருத்துவ ஊழியர்கள், அதிக வயதுடையோர் போன்றோருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுகாதார அமைச்சர் Matt Hancock இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது இங்கிலாந்தில் வசிக்கும், மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால், NHS-ஐ தொடர்பு கொள்ளும் படி தெரிவித்துள்ளார்.
இதை செய்வதற்கு எளிதான வழியாக nhs.uk இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம், அல்லது 119-ஐ அழைக்கலாம் அப்படி அதற்கும் வாய்ப்பு இல்லை என்றால் உள்ளூர் GP-ஐ தொடர்பு கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி நடுப்பகுதியில், நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இலக்கை அடைவதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன.
இருப்பினும், இந்த நோயால் பாதிக்கப்படக்கூடியவர்கள் அனைவரும் பாதுகாக்கப்படும் வரை நாங்கள் ஓய்வெடுக்கப் போவதில்லை.
எனவே NHS மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்த நோயால் பாதிக்கப்பட கூடியவர்களை அடைய தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர்.
நாங்கள் இந்த தடுப்பூசியை இளையவயதினருக்கு வழங்குவதற்கு விரிவுபடுத்துகிறோம்.
பிப்ரவரி 15-ஆம் திகதிக்குள் ஒன்று முதல் நான்கு வரையிலான முன்னுரிமை(கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டியவர்கள்) குழுக்களில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கான இலக்கை அடைய இருக்கிறோம் என்று அவர் கூறினார்.
மேலும், NHS இங்கிலாந்தின் முதன்மை பராமரிப்புக்கான மருத்துவ இயக்குநரும், GP பயிற்சி பெற்றவருமான மருத்துவர் Nikki Kanani கூறுகையில், சுகாதார சேவை வரலாற்றில் NHS-ன் இந்த தடுப்பூசி திட்டம் ஒரு வலுவான தொடக்கத்திற்கு வந்துள்ளது.
எனது சக ஊழியர்களின் அயராத முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாடு முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
ஆனால் நீங்கள் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருந்தால், நீங்கள் இன்னும் தடுப்பூசி பெறவில்லை என்றால், தயவுசெய்து முன் வந்து போட்டு கொள்ளுங்கள்.
தடுப்பூசி பாதுகாப்பானது, எளிமையானது, இது உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் இந்த வைரஸிலிருந்து முக்கியமான பாதுகாப்பை வழங்கும் என்று தெரிவித்தார்.
இங்கிலாந்தில் இன்றைய நிலவரப்படி 12.2 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை Matt Hancock உறுதிப்படுத்தினார்.
இது இங்கிலாந்து முழுவதும் உள்ள பெரியவர்களில் நான்கில் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் கணித்ததை விட கணிசமாக அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை நாங்கள் எதிர்பார்த்ததை விட தடுப்பூசி எடுத்துக்கொள்வது கணிசமாக சிறப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசி எடுப்பதில் இங்கிலாந்து மிகவும் சாதகமான அணுகுமுறைகளைக் கொண்டுள்ளதாகவும், நேற்று நள்ளிரவு நிலவரப்படி, 80 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே, நாங்கள் இப்போது முதல் டோஸ் கொடுத்துள்ளோம்.
தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழுவால் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முன்னுரிமை பட்டியலில் தற்போது ஒன்பது குழுக்கள் உள்ளன.
தற்போது முதல் நான்கு முன்னுரிமைக் குழுக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன, இதில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் தொழிலாளர்கள், பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்கள், அவர்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக வைரஸால் பாதிக்கப்படக்கூடியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


