பிரித்தானியாவுக்கு 80 பெருவெள்ள எச்சரிக்கைகள்
பிரித்தானியாவுக்கு, பெருவெள்ளம் தொடர்பில் 80க்கும் மேற்பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
பெருவெள்ள எச்சரிக்கைகள்
பிரித்தானியாவில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், இங்கிலாந்துக்கு 80க்கும் மேற்பட்ட பெருவெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தென்மேற்கு மற்றும் மத்திய இங்கிலாந்தில் பெருவெள்ள பாதிப்பு இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மோசமான பெண் ஒருவருடன் அருவருப்பான செயலில் பிரித்தானியப் பிரதமர் ஒருவர்: சூடுபிடிக்கும் எப்ஸ்டீன் விவகாரம்
ஏற்கனவே பெருவெள்ளம் தொடர்பில் 253 எச்சரிக்கைகள் அமுலில் இருக்கும் நிலையில், North Yorkshire முதல் Cornwall வரையிலும், வேல்ஸ் எல்லைகள் முதல் Norfolk வரையிலும் பெருவெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வேல்ஸ் நாட்டுக்கென ஏற்கனவே தனியாக 11 பெருவெள்ள எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |