குவியும் வரி வருவாய்... ட்ரம்ப் நிர்வாகத்தின் அடுத்த திட்டம்
இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதால் ஜவுளி, கடல் மற்றும் தோல் ஏற்றுமதிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
242 சதவீத அதிகரிப்பு
இந்த நிலையில், ஜூலை மாதத்தில் மட்டும் அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட 30 பில்லியன் டொலர் வரி வருவாயை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடுகையில் 242 சதவீத அதிகரிப்பு என்று CNN தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திலிருந்து ட்ரம்ப் அரசாங்கம் வரிகளிலிருந்து மட்டும் 100 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டியுள்ளது, அப்போது கிட்டத்தட்ட அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத வரியை ட்ரம்ப் விதித்திருந்தார்.
இதுவும் முந்தைய ஆண்டில் இதே நான்கு மாதங்களில் வசூலிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமாகும். தற்போது இந்தப் பணத்தை எல்லாம் ட்ரம்ப் நிர்வாகம் என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரி வருவாய் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் இரண்டு சாத்தியமான பதில்களை வழங்கியுள்ளார்: அரசாங்கத்தின் பல டிரில்லியன் டொலர் கடனைக் குறைப்பது அல்லது வரி தள்ளுபடி காசோலைகளை அமெரிக்க மக்களுக்கு திருப்பி அனுப்புவது. இதில் வரி வருவாயில் ஒரு பகுதியை மக்களுக்கு அளிப்பதே ட்ரம்பின் முடிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |