பிரித்தானியாவுக்கு மருத்துவர் வேலைக்காக வந்துவிட்டு உணவகங்களில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்கள்: ஒரு அதிர்ச்சி தகவல்
பிரித்தானியாவில் பல் மருத்துவராக வேலை பார்க்க வந்த வெளிநாட்டவர்கள் பலர், மெக்டொனால்ட்ஸ் போன்ற உணவகங்களில் வேலை பார்ப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உணவகங்களில் வேலை பார்க்கும் மருத்துவர்கள்
பல் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம், 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ள பல் மருத்துவர்கள் கூட, பிரித்தானியாவில் மெக்டொனால்ட்ஸ் போன்ற உணவகங்களில் வேலை பார்ப்பதாக Association of Dental Groups (ADG) என்னும் பல் மருத்துவர்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
இப்படி கல்வித் தகுதியும், அனுபவமும் இருந்தும் அவர்கள் உணவகங்களில் வேலை பார்ப்பதற்கான காரணம், வெளிநாட்டில் பல் மருத்துவம் பயின்றவர்கள் பிரித்தானியாவில் பல் மருத்துவர்களாக பயிற்சி செய்யவேண்டுமானால், அவர்கள் overseas registration examination (ORE) என்னும் இரண்டு பகுதிகளைக் கொண்ட தேர்வு எழுதி அதில் வெற்றி பெறவேண்டும்.
விடயம் என்னவென்றால், அந்த தேர்வு எழுத வாய்ப்புக் கிடைப்பதே கடினம் என்கிறார்கள் அந்த மருத்துவர்கள்.
தகுதி படைத்த 6,000 பல் மருத்துவர்கள் ORE தேர்வெழுத காத்திருக்கும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, 600 மருத்துவர்கள் மட்டுமே தேர்வெழுத முடியும் என்ற நிலை உள்ளது.
இப்படி ஒரு பக்கம் மருத்துவம் படித்தவர்கள் உணவகங்களில் வேலை பார்த்துக்கொண்டிருக்க, மறுபக்கமோ இங்கிலாந்தின் NHS அமைப்பில் 2,749 பல் மருத்துவர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.
4.5 மில்லியன் மக்கள் பல் மருத்துவ சேவை கிடைக்காமல் அவதியுற்றுவருகிறார்கள்.
ஆக, இப்படி மருத்துவர்கள் பல் மருத்துவம் பயின்றுவிட்டு உணவகங்களில் வேலை பார்ப்பது அவமானம். ஆகவே, உடனடியாக இந்த ORE தேர்வு முறையை மாற்றவேண்டும் என Association of Dental Groups (ADG) அமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |