அவுட் ஆக்க முடியாத கோபத்தில்... பந்தை எடுத்து புஜாரா மீது எறிய முயன்ற இங்கிலாந்து வீரர்! வெளியான வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஓவர்ட்டன் கடும் கோபமடைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல், இங்கிலாந்து அணி திணறி வருகிறது. துவக்க வீரரான ரோகித்சர்மா சதமடித்து 127 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பவுலியன் திரும்பினார்.
அதே போன்று புஜாரா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 61 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
#IndvsEng Overton do not mess with him.. he will make you to ball for 2 days !! ? Agressive pujara pic.twitter.com/GcY07rxT0o
— shivam shrivastav (@shivams70901101) September 4, 2021
இந்நிலையில், இப்போட்டியில் ரோகித் மற்றும் புஜாரா ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டதால், இந்தியாவின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல், இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணறினர்.
ஒரு கட்டத்தில் புஜாரவிற்கு பந்து வீசிய, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஓவர்டன், தடுத்து ஆடிய பந்தை அப்படியே எடுத்து ரன் அவுட் ஆக்குவதற்கு எறிவது போன்று கடும் கோபத்தை வெளிப்படுத்தி சில வார்த்தைகளை வெளிவிட்டார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.