40 வயதிற்கு பிறகும் இளமையாக இருப்பதற்கு, இந்த பொடியை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்
வயதாகும்போது, தோல் மோசமடையத் தொடங்குகிறது. முகத்தில் சுருக்கங்கள் வர ஆரம்பிக்கும். முகத்தின் பொலிவு குறையும்.
பெரும்பாலும் மக்கள் இதை சமாளிக்க தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துகின்றனர், ஆனால் தோல் பராமரிப்பை விட உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
40 வயதிற்குப் பிறகும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பலரும் இந்த ஒரு பொடியை எடுத்துக்காட்டுகின்றனர். அதை எப்படி நீங்கள் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- பாசி பருப்பு ஒரு கப்
- ஓட்ஸ் - ஒரு கப்
- வேர்க்கடலை - 10 கிராம்
- பாதாம் - 10 கிராம்
- சூரியகாந்தி விதைகள் - 10 கிராம்
- ஆளி விதை - 10 கிராம்
- சியா விதைகள் - 10 கிராம்
- உலர்ந்த ரோஜா இதழ்கள்
- உலர்ந்த புதினா இலைகள்
- நெல்லிக்காய் தூள் - 2 டீஸ்பூன்
- அதிமதுரம் - ஒரு குச்சி
எப்படி செய்வது?
-
முதலில் ஒரு அடுப்பில் கடாயை வைத்து, அதில் அனைத்து பொருட்களையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
- பின் அவற்றை, ஒரு மிக்ஸியில் சேர்த்து அதில் நெல்லிக்காய் தூள் மற்றும் அதிமதுரம்சேர்த்து நன்றாக தூள் தயார் செய்யவும்.
- இந்த பொடியை காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும்.
-
இந்த பொடியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து, உணவுக்கு நடுவில் குடிக்கவும்.
இந்த தூள் சருமத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?
பருப்பில் அதிக அளவு புரதம் உள்ளது, இது சரும செல்களை உருவாக்கவும் சரிசெய்யவும் உதவுகிறது.
ஓட்ஸில் சிலிக்கா மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன, அவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை சருமத்தை பாதுகாப்பாக வைத்திருகின்றது.
சியா விதைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும், இது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கிறது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கும் நல்ல அளவு புரதமும் இதில் உள்ளது.
ஆளிவிதையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது சருமத்தை பாதுகாக்கிறது மற்றும் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |