கனடாவில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்தியர்... குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கிய அதிர்ச்சி தகவல்
ஒன்ராறியோவின் Barrie பகுதியில் மூவர் குழுவால் கொடூரமாக தாக்கப்பட்ட இந்தியர் ஒருவர், ஒரு வாரத்திற்கு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
பில் தொகையால் கைகலப்பு
கடந்த 17ம் திகதி Barrie பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் தொடர்புடைய தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பொலிஸ் தரப்பு தெரிவிக்கையில், மரணமடைந்த ஷெரீப் ரஹ்மான் என்பவர் தமது உணவகத்தில் வாடிக்கையாளர் மூவரிடம் உணவகத்தை மூட இருப்பதால் பில் தொகையை செலுத்த கோரியுள்ளார்.
Credit: ctvnews
இது வாக்குவாதத்தில் துவங்கி கைகலப்பில் முடிந்துள்ளது. 44 வயது ஷெரீப் ரஹ்மான் மற்றும் அவரது உறவினர் ஒருவரையும் அந்த மூவர் குழு மிருகத்தனமாக தாக்கி விட்டு தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ரஷ்மான் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவர் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரிகள் மூவர்
தகவல் வெளியானதும் Owen Sound நகர நிர்வாகம் திங்கள் மதியம் வரை அனைத்து நகர வசதி கொடிகளும் அரைக்கம்பத்தில் இறக்கப்படும் என்று அறிவித்தது. புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட இரவு அஞ்சலி கூட்டத்தில் Owen Sound நகர மக்கள் சுமார் 800 பேர்கள் வரையில் கலந்துகொண்டுள்ளனர்.
தாக்குதல்தாரிகள் மூவர் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் இல்லை என்றாலும், தீவிரமாக தேடப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |