காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர்
Stolen car tracked across Paris before owner cuts engine to stop thieves: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சிலர் கார் ஒன்றை திருடிச் செல்ல, அதன் உரிமையாளர் சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஆடி கார் ஒன்றை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளார்கள்.
திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர்
தன் கார் திருட்டுப்போனதை அறிந்த காரின் உரிமையாளர், உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்ததுடன், ஜிபிஎஸ் மூலம் தன் காரை கண்காணிக்கத் துவங்கியுள்ளார்.

கார் நெடுஞ்சாலை ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்க, சரியாக சுங்கச்சாவடி ஒன்றை நெருங்கும்போது, மொபைல் ஆப் ஒன்றின் உதவியுடன் தன் காரின் எஞ்சினுடைய இயக்கத்தைத் துண்டித்துள்ளார் அவர்.
அதற்குள், காரை பின்தொடர்ந்த பொலிசார் கார் நிற்கும் இடத்தை அடைய, காருக்குள்ளிருந்த திருடர்கள் வகையாக சிக்கிக்கொண்டார்கள்.
காரைத் திருடிய 18 மற்றும் 19 வயதுடைய அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த பொலிசார் அவர்களை காவலில் அடைத்துள்ளார்கள்.