ஆசையாக வாங்கிய காருக்கு ரூ.4 லட்சம் செலவு செய்து நல்லடக்கம் செய்த உரிமையாளர்
ரூ.4 லட்சம் செலவு செய்து காருக்கு நல்லடக்கம் செய்த நிகழ்வில் சுமார் 1500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காருக்கு நல்லடக்கம்
இந்திய மாநிலமான குஜராத், அம்ரேலி மாவட்டத்தைச் சேந்தவர் சஞ்சய் பொலாரா. இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பாக வேகன் ஆர் காரை வாங்கியுள்ளார்.
இந்த காரை வாங்கிய பின்னர் தனக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டதாகவும், சமுதாயத்தில் தனக்கு மதிப்பு ஏற்பட்டதாகவும் பொலாரா கூறுகிறார். இந்த காரால் நல்ல தொழில் வளர்ச்சி ஏற்பட்டு குடும்பமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
தற்போது, இந்த கார் ஓடாது என்று தெரிந்து அதனை பழைய கடையில் கொடுக்காமல் நல்லடக்கம் செய்து மரியாதை செலுத்தி சமாதி ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்துள்ளார்.
இதற்காக, சுமார் ரூ.4 லட்சம் செலவு செய்து காரை நல்லடக்கம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
காரை நல்லடக்கம் செய்வதற்கு பள்ளம் தோண்டப்பட்டு, இறங்குவதற்கு ஏற்ற வகையில் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நல்லடக்க நிகழ்ச்சியில் 1500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், கார் புதைக்கப்பட்ட இடத்தில் மரம் நட்டு எதிர்கால சந்ததியினருக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், காரின் நல்லடக்க நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் அச்சடித்து 2000 பேருக்கு கொடுத்துள்ளனர்.
વ્હાલસોઈ નસીબદાર કારની સમાધિ !!!
— Kamit Solanki (@KamitSolanki) November 8, 2024
અમરેલીમાં પરિવાર માટે લકી કારને વેચવાને બદલે ઘામધૂમથી જમણવાર યોજી સમાધિ અપાઈ, કારના સમાધિ સ્થળે વૃક્ષારોપણ કરાશે #Gujarat #Amreli pic.twitter.com/1c4hiogs7n
இந்த அழைப்பிதழில், "எங்களுடைய குடும்பத்தில் இந்த கார் 2006 -ம் ஆண்டு முதல் குடும்ப உறுப்பினராகவே இருந்து வருகிறது. அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திய இந்த காருக்கு நல்லடக்கம் செய்யவுள்ளோம்" என்று குறிப்பிட்டிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |