லண்டன் சுரங்கப்பாதையில் குத்துச்சண்டை: இணையத்தை கலக்கும் இரண்டு எலிகள்
Oxford Circus Mice Boxing Video Goes Viral: லண்டன் சுரங்கப்பாதையில் இரண்டு எலிகள் குத்துச் சண்டை போடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
லண்டன் சுரங்கப்பாதை நிலையத்தில் பயணம் செய்தவர்கள் தங்களுடைய அவசர பயணத்திற்கு இடையே சுவாரஸ்யமான குத்துச்சண்டை நிகழ்ச்சியை கண்டு ரசித்துள்ளனர்.
லண்டனின் ஆக்ஸ்போர்ட் சர்க்கஸ் (Oxford Circus) நிலையத்தின் சுரங்கப்பாதையில் இரண்டு எலிகள் தங்கள் பின்னங்கால்களில் நின்று கொண்டு முன் கைகளால் குத்துச் சண்டையில் ஈடுபட்ட காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைதளத்தில், லண்டன் சுரங்கப்பாதையில் சண்டை… ஆனால் “என்ன ஒரு அழகு” என்ற தலைப்புடன் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.
வெறும் 4 நாட்களில் இந்த வீடியோ கிட்டத்தட்ட 120000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
ஆனால் இந்த குத்துச்சண்டையில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்பது தெரியவரவில்லை.
A pair of mice get into a squabble outside a subway station in London 👀 pic.twitter.com/7T6rwohqhH
— TheBlaze (@theblaze) September 2, 2026
இந்த வீடியோ காட்சி இணையத்தில் பரவியதை அடுத்து இணையத்தில் அமெரிக்க சுரங்கப்பாதை எலிகள் மற்றும் பிரித்தானிய சுரங்கப்பாதை எலிகள் இடையே ஒப்பீடு விவாதத்தில் நெட்டிசன்கள் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |