லண்டன் பேருந்தில் பதறவைக்கும் சம்பவம்: இரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட இளைஞர்
லண்டனில் பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு குற்றுயிராக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தான நிலையில் இளைஞர்
லண்டனில் பரபரப்பான ஆக்ஸ்போர்டு தெருவில் வைத்தே குறித்த சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை உல்ளூர் நேரப்படி இரவு 10.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவந்த பொலிசார், 25 வயது இளைஞரை ஆபத்தான நிலையில் மீட்டுள்ளனர்.
@Image: David Natha
மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள அந்த இளைஞர் தற்போதும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறுகின்றனர். தாக்குதல்தாரி சம்பவயிடத்தில் இருந்து தப்பியுள்ளதாகவும், பொலிசார் தீவிரமாக விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சம்பவயிடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பேருந்துக்கும் நடைபாதைக்கும் இடையே இரத்தம் குளாமாக காணப்படுவதுமாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும், தாக்குதல் சம்பவத்தை அடுத்து பரபரப்பான ரீஜண்ட் தெரு மற்றும் ஹேர்வுட் பிளேஸ் இடையே சாலையை மூடியிருந்தனர்.
@Image: David Natha
பொலிசார் கோரிக்கை
மட்டுமின்றி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேருந்துகளும் வேறு சாலையூடாக திருப்பி விடப்பட்டது. இதனால் லண்டன் பேருந்து தடம் 7, 55, 73, 94, 98, 139 மற்றும் 390 ஆகியவை பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு பொலிஸ் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் தொடர்பில் மேலதிக தகவல் எதையும் பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.
@Image: David Natha