தித்திக்கும் சுவையில் பால் கொழுக்கட்டை: எப்படி செய்வது?
பண்டிகை காலங்களில் இருந்தே வீட்டில் விசேஷங்கள் என்றால் உடனே நாம் செய்யக்கூடியது இனிப்பு தான்.
பால் கொழுக்கட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஓர் இனிப்பு வகை.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் பால்- 3 கப்
- அரிசி மாவு - 1 கப்
- உப்பு- 1 சிட்டிகை
- ஏலக்காய் - 6
- தண்ணீர்- தேவையான அளவு
- சர்க்கரை - ½ கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து அரிசி மாவை நன்கு கலக்கவும்.
இதற்கு பிறகு கொஞ்சகொஞ்சமாக சூடான நீரை ஊற்றி, மாவை பிணைந்து சிறிய சிறிய உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 கப் தேங்காய் பால் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தேங்காய்ப்பால் கொதித்து வந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பின் 2 நிமிடம் கழித்து மிதமான தீயில் அடுப்பை வைத்து உருட்டி வைத்த உருண்டைகளை இந்த தேங்காய் பாலில் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
இறுதியாக இதில் ஏலக்காயை நறுக்கி சேர்த்து கிளறி இறக்கினால் ருசியான பால் கொழுக்கட்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |